2012-05-12 16:03:26

நிலங்களையும் காடுகளையும், மீன்பிடித்தொழிலையும் கொண்டிருக்கும் உரிமைகளைப் பாதுகாக்கும் ஐ.நா.ஆதரவு பெற்ற முதல் கையேடு


மே 12,2012. உலகில் மக்கள், குறிப்பாக, ஏழைகள், நிலங்களையும், காடுகளையும், மீன்பிடித்தொழிலையும் கொண்டிருக்கும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசுகளுக்கு உதவும் உலகளாவிய கையேடு ஒன்றைத் தயாரித்துள்ளது ஐ.நா.ஆதரவு பெற்ற ஒரு குழு.
உலக அளவில் முதன்முறையாகத் தயாரிக்கப்பட்டுள்ள இக்கையேடு குறித்துப் பேசிய ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவன இயக்குனர் José Graziano da Silva, நிலத்தையும் மற்றும் பிற இயற்கை வளங்களையும் பயன்படுத்துவதற்கு ஏழைகளுக்கும் நலிந்தோருக்கும் இருக்கும் சமஉரிமைகளைப் பாதுகாப்பது, பசி மற்றும் வறுமைக்கெதிரானப் போராட்டத்தில் முக்கியமான கூறு என்று கூறினார்.
இநதக் கையேட்டை நாடுகள் அங்கீகரித்திருப்பது ஒரு வரலாற்று நிகழ்வு என்றும், பசி மற்றும் ஏழ்மையால் வாடும் மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கு இது உதவும் என்றும் Graziano da Silva தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.