2012-05-11 15:08:34

உலகின் மூன்றில் இடது பகுதி குழந்தைகளின் இறப்புக்குத் தடுத்து நிறுத்தக்கூடிய தொற்றுநோய்க் கிருமிகள் காரணம் – அமெரிக்க வல்லுனர்கள்


மே 11,2012. இளஞ்சிறார் மத்தியில் இடம் பெறும் இறப்புக்களில் பெரும்பாலானவை தடுத்து நிறுத்தக்கூடிய தொற்றுநோய்க் கிருமிகளால் ஏற்படுபவை என்று வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
2010ம் ஆண்டில் 193 நாடுகளில் இடம் பெற்ற இறப்புக்களை வைத்து the Lancet இதழில் ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டு வல்லுனர்கள், 5 வயதை அடையுமுன்னரே இறந்த 76 இலட்சம் குழந்தைகளில் மூன்றில் இரண்டு பகுதிக் குழந்தைகளின் இறப்புக்கு தொற்றுநோய்களே காரணம் என்று கூறியுள்ளனர்.
நிமோனியாக் காய்ச்சல் இந்த இறப்புக்களுக்கு முக்கிய காரணம் என்று கூறும் அமெரிக்க வல்லுனர்கள், இந்தக் குழந்தை இறப்புக்களில் பாதி, ஆப்ரிக்காவில் இடம் பெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட 16 இலட்சத்து 80 ஆயிரம் குழந்தைகளின் இறப்புக்கு தொற்றுநோய்க் கிருமிகளே காரணம் என்று கூறப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.