2012-05-10 15:36:14

வியட்நாமில் கத்தோலிக்க முதலாளிகள் வழியாக மக்களுக்குப் பயன்படும் முன்னேற்றங்கள்


மே,10,2012. பொருளாதாரச் சரிவு, வேலையின்மை ஆகியவைகளால் தற்கொலை வரை மக்கள் செல்லும் இக்காலத்தில், வியட்நாமில் உள்ள கத்தோலிக்க வர்த்தக முதலாளிகள் மக்களுக்குப் பயன்படும் முன்னேற்றங்களைக் கொணர்ந்துள்ளனர்.
2003ம் ஆண்டு Ho Chi Minh நகர் பேராயராக இருந்த கர்தினால் Jean Baptiste Phạm Minh Mẫn, அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பில் வியட்நாம் செல்வந்தர்கள் இணைந்து வந்தனர். இந்த அமைப்பின் வழியாக, இன்றும் வியட்நாமில் பல பொருளாதார முன்னேற்றங்கள் நிகழ்கின்றன என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
Quang Minh கூட்டுறவு என்ற ஒரு பெரும் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் Cao Dũng Khanh நடத்தி வரும் நிறுவனத்தில் 3000க்கும் அதிகமானோர் வீட்டில் இருந்த வண்ணம் தொழில்களைச் செய்து வருகின்றனர். வியட்நாமில் நல்ல பாதிப்புக்களை உருவாக்கிய முதல் 100 பேரில் Cao Dũng Khanhன் பெயரும் இடம் பெற்றுள்ளது.
நாடெங்கும் 300க்கும் அதிகமான கத்தோலிக்க முதலாளிகள் காரித்தாஸ், மற்றும் பிற அரசு சாரா அமைப்புக்கள் மூலம் பல்லாயிரம் ஏழைகளுக்கு உதவிகள் செய்து வருகின்றனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் மேலும் கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.