2012-05-10 14:37:10

கவிதைக் கனவுகள் ... உன்னைச் செதுக்கு


நாகரீகமாகத் தெரிந்த நான்கு பேர்
நையாண்டிப் பேசிக் கொண்டிருந்தார்கள்
கையிலும் வாயிலும் சிகரெட்டுடன்.
நான்கு பேர் பேச்சுக்களிலும்
ஒருவர் சிதைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்.
பொறாமைத் தீப் பற்றி எரிந்து கொண்டிருந்தது.
காவி வேட்டி காவித் துண்டு
இவற்றை மட்டுமே சொத்தாகக் கொண்டிருந்த
துறவி ஒருவர் அந்தப் பக்கம் கடந்து போனார்
அந்த நான்கு பேரின் பேச்சும்
அவர் காதில் விழுந்தது.
வாய் திறவாமல் அவர்களைக் கடந்து சென்றார்.
பின்னர் சந்தித்த மக்களிடம் சொன்னார்....
யார் இகழ்ந்து பேசினாலும்
அவர்களைப் புகழ்ந்து பேச மறவாதீர்.
மனம் புண்படும்படிப் பேசிக்
கெடுதல் செய்தவருக்குச் சேவை செய்ய மறவாதீர்.
பிறர் துன்பம் கொடுத்தாலும்கூட
அவருக்கு உதவி செய்யுங்கள் முடிந்தவரை....
கொடிய பகைவனிடமும் இனிமையும்
நன்மையும் கலந்த வார்த்தைகளையே பேசுங்கள்...







All the contents on this site are copyrighted ©.