2012-05-08 14:57:58

அரபு வசந்தத்தில் லெபனன் மக்களின் பங்கு வன்முறையைத் தூண்டுவதாக இருக்கக் கூடாது – லெபனன் முதுபெரும் தலைவர்


மே 08,2012. லெபனன் மக்களைப் பல வேறுபாடுகள் பிரித்தாலும், அவர்கள் ஒருவர் ஒருவர் மீது நம்பிக்கை வைத்து வாழ்வதற்கு இது தகுந்த நேரம் என்று அந்நாட்டு மாரனைட்ரீதி கத்தோலிக்க முதுபெரும் தலைவர் Beshara al-Rahi கூறினார்.
அரபு நாடுகளில் இடம் பெற்ற நிகழ்வுகளை வைத்து லெபனன் மக்கள் அறிவிலிகளாக இருந்து விடக்கூடாது என்றுரைத்த முதுபெரும் தலைவர் al-Rahi, அப்பகுதியின் அரசியல், பொருளாதார மற்றும் சமூகச் சீர்திருத்தங்களில் அரபு உலகம் கவனம் செலுத்துவதற்கு அண்மைக் காலங்களில் அரபு நாடுகளில் இடம் பெற்ற மக்கள் எழுச்சிகள் தூண்டுதலாக இருக்கின்றன என்றும் கூறினார்.
கானடாவின் Montreal அரசி எலிசபெத் பயணியர் விடுதியில், கானடாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அந்நாட்டு உயர்மட்ட அதிகாரிகளுக்கு உரையாற்றிய லெபனன் முதுபெரும் தலைவர் al-Rahi இவ்வாறு கூறினார்.
கானடாவில் வாழும் லெபனன் மக்கள் தங்கள் நாட்டுத் தேசிய சமூக, கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வோடு ஒன்றிணைந்து வாழுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.