2012-05-07 15:58:31

ஆசியக்கண்டத்தில் உள்ள பல பழமைக் கலாச்சார சின்னங்கள் அழியும் ஆபத்து


மே,07,2012. கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து வரும் பொருளாதாரமும், அதன் விளைவாக பரவிவரும் சுற்றுலாப் பயணங்களும் ஆசியாவின் பல பகுதிகளில் நிலவிடும் போர்ச்சூழலும் ஆசியக்கண்டத்தில் உள்ள பல பழமைக் கலாச்சார சின்னங்களை அழிக்கும் ஆபத்து பெருகியுள்ளது என்று உலகத் தொன்மைக் கலாச்சாரத்தைக் காக்கும் ஒரு நிறுவனம் (Global Heritage Fund - GHF) கூறியுள்ளது.
ஆசியாவின் பல நாடுகளில் உள்ள 10 தொன்மைக் கலாச்சாரத் தலங்களைத் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள இந்நிறுவனம், இந்த ஆபத்து, உலகின் பல நாடுகளில் இருக்கும் பழமைக் கலாச்சார தலங்களிலும் உள்ளது என்று கூறியுள்ளது.
தாய்லாந்து நாட்டில் பழமைவாய்ந்த Siamese கலாச்சாரத்தின் தலைநகராகவும், ‘கிழக்கின் வெனிஸ்’ என்றும் புகழ்பெற்ற Ayutthaya என்ற பழம்பெரும் நகரம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்று இவ்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
சிந்து வெளிக் கலாச்சாரத்தின் நினைவாக இந்தியாவில் உள்ள Rakhigarhi என்ற இடமும் அழியும் நிலையில் உள்ளதென இவ்வறிக்கை கூறுகிறது.
இவையன்றி, சீனா, மியான்மார், பங்களாதேஷ், பிலிப்பின்ஸ், கம்போடியா ஆகிய நாடுகளில் உள்ள பல நினைவுச் சின்னங்கள் அழியும் நிலையில் உள்ளதென உலகத் தொன்மைக் கலாச்சாரத்தைக் காக்கும் நிறுவனத்தின் இவ்வறிக்கை கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.