2012-05-07 15:59:55

40 ஆண்டுகளில் முதற்தடவையாக அணுமின் சக்தியில்லாத ஜப்பான்


மே,07,2012. 2011 மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமிப் பேரலையால் ஃபுக்குஷிமா அணுமின் நிலையத்திலிருந்த அணு உலைகள் உருகிப்போன சம்பவத்தை அடுத்து, ஜப்பான் மேற்கொண்டுவரும் பாதுகாப்பு ஏற்பாட்டின் ஓர் அங்கமாக அணுமின் சக்தியில்லாத ஜப்பானை உருவாக்கும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஜப்பானின் டோமாரி அணுமின் நிலையத்தில் இயங்கிவந்த மூன்றாவது அணு உலை, பழுதுபார்க்கும் பணிக்காக தற்போது மூடப்பட்டுள்ளதையடுத்து ஜப்பான் கடந்த 40 ஆண்டுகளில் முதல்தடவையாக அணுமின் சக்தியில்லாத நாடாக இயங்குகின்றது.
கடந்த ஆண்டுவரை, ஜப்பான் அதன் மின்சக்தி தேவையில் 30 விழுக்காட்டை அணுமின் மூலமே பெற்றுவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.