2012-05-05 14:51:50

திருப்பீடப் பேச்சாளர் : அறிவியல், அன்பின்றி தனது மேன்மையை இழக்கிறது


மே 05,2012. அறிவியல், அன்பின்றி தனது மேன்மையை இழக்கிறது, அன்பு மட்டுமே மனித சமுதாயத்தின் அறிவியல் ஆய்வுக்கு உறுதி வழங்குகிறது என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
உரோம் இயேசுவின் திருஇதய கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறையிடம் இவ்வியாழனன்று திருத்தந்தை பேசியதை, வத்திக்கான் தொலைக்காட்சியின் வார நிகழ்ச்சியில் சுட்டிக் காட்டிய அருள்தந்தை லொம்பார்தி, மனித மனம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் மனித சமுதாயத்தின் நலனுக்காகவென்று அமைந்துள்ளதா? என்ற கேள்வியையும் திருத்தந்தை எழுப்பியதாகக் கூறினார்.
அறிவியலும் மருத்துவ ஆராய்ச்சியும் மனித நலத்தில் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளது, அன்பினால் வழிநடத்தப்பட வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பது இதில் தெரிகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.