2012-05-04 15:24:53

காங்கோ குடியரசில் புரட்சிக்குழுவின் வன்முறையால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு


மே 04,2012. ஆப்ரிக்க நாடான காங்கோ சனநாயகக் குடியரசில் புரட்சிக்குழுவின் தொடர் வன்முறையால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு கட்டாயமாக வெளியேறும் நிலைக்கு உள்ளாகியுள்ளன என்று மறைபோதகக் குரு ஒருவர் கூறினார்.
வட கிவு மாநிலத்தில் இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 2 இலட்சத்து 41 ஆயிரம் குடும்பங்கள் வெளியேறியுள்ளன, இதற்குப் புரட்சிக்குழுவின் தலைவர் Bosco Ntagandaவின் படைகளே காரணம் என்று சவேரியன் மறைபோதக அருள்தந்தை Loris Cattani கூறினார்.
மனித சமுதாயத்துக்கு எதிராகக் குற்றம் செய்ததற்காக Ntaganda அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படவிருக்கிறார் என்று ஃபீதெஸ் செய்தி நிறுவனம் கூறியது.
ஐ.நா.வின் கணக்குப்படி, காங்கோ சனநாயகக் குடியரசில் 20 இலட்சத்துக்கு மேற்ட்ட மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.