2012-05-04 15:26:51

ஆசியப் பள்ளிச் சிறாருக்குக் கண் பிரச்சனை


மே 04,2012. ஆசியாவின் முக்கிய நகரங்களில் 90 விழுக்காட்டுச் சிறார் வரை கிட்டப்பார்வை பிரச்சனையுடன் பள்ளிப்படிப்பை முடித்து வெளியேறுகின்றனர் என்று ஓர் ஆய்வு கூறுகிறது.
பள்ளிகளில் மாணவர்கள் கடினமாய் வேலை செய்வதாலும், சூரிய ஒளியில் இருக்கும் நேரம் குறைபடுவதாலும் இப்பிரச்சனை ஏற்படுகின்றது என்று அந்த ஆய்வு கூறுகிறது.
இச்சிறாரில் ஐந்தில் ஒருவருக்கு கண் பார்வையிழப்பு உட்பட கடும் பார்வைக் கோளாறு ஏற்படுகின்றது என்று The Lancet மருத்துவ இதழில் அறிவியலாளர் கூறியுள்ளனர்.
ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழத்தைச் சேர்ந்த பேராசிரியர் Ian Morgan தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதன்படி, தென் கிழக்கு ஆசியாவில் மக்கள் மத்தியில் 20 முதல் 30 விழுக்காடு வரை இப்பிரச்சநை இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.