2012-04-27 15:12:02

சான் சால்வதோர் : Guantanamo தடுப்பு முகாமை நிரந்தரமாக மூடுவதற்கு வேண்டுகோள்


ஏப்ரல்,27,2012: சர்ச்சைக்குரிய Guantanamo தடுப்பு முகாமை நிரந்தரமாக மூடுமாறு எல் சால்வதோர் நாட்டு சான் சால்வதோர் பேராயர் José Luis Escobar கேட்டுள்ளார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு Guantanamo தடுப்பு முகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்ட இரண்டு கைதிகளுக்கு, அமெரிக்காவின் வேண்டுகோளின்பேரில் எல் சால்வதோர் நாடு அண்மையில் அடைக்கலம் கொடுத்ததையொட்டி இவ்வாறு கேட்டுள்ளார் பேராயர் Luis Escobar.
சுதந்திரம், சனநாயகம் மற்றும் உலகின் நன்மையைக் கருதி இம்முகாமை மூடுவதற்கு இது தக்க தருணம் என்றும் பேராயர் தெரிவித்தார்.
கியூபாவின் தென் கிழக்கிலுள்ள Guantanamo வளைகுடாப் பகுதி 1903ம் ஆண்டிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டுக்குச் சொந்தமானதாக இருந்து வருகிறது. இதன் கரையிலுள்ள தடுப்பு முகாமில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் கைதிகள் வைக்கப்பட்டுள்ளனர். கடல்களில் கைது செய்யப்படும் கியூபா மற்றும் ஹெய்ட்டி அகதிகள் இங்கு 1990களில் வைக்கப்பட்டனர்.








All the contents on this site are copyrighted ©.