2012-04-26 13:46:03

கவிதைக் கனவுகள் .... மறந்துவிடப் போராட்டம்


மறந்துவிட முயற்சிக்கிறேன்
மறக்க முடியவில்லை
நிழலாக வந்து வந்து போகின்றன
கடந்த காலக் காயங்கள்.
நடந்து முடிந்த ஒன்று என்று
ஏற்றுக்கொள் மனம் சொல்கிறது
மனமும் விரும்புகிறது மறப்பதற்கு..
நுழைந்தார்கள் வெட்டினார்கள்
உயிர்களை உறிஞ்சினார்கள்
அவதூறுகளை வீடெங்கும் தெளித்தார்கள்
அள்ளினார்கள் உழைத்துச் சேர்த்த அனைத்தையும்
வெறித்து வெறித்துப் பார்த்தபடி ஓர் ஓரத்தில் நான்...
அனைத்தையும் மறந்துவிடப் போராடுகிறேன் இன்று நான்...
அந்த நாள் பதித்த
மனக் காயங்களை, வெறுப்பை
மறக்கத் தினம் தினம் போராட்டம்
நல்லதொரு அதிகாலைப் பொழுதில்
வேதநூல் வழிகாட்டியது
மன்னித்துவிடு. உள்ளும் புறமும் குணமடைவாய்.
உன் செயல்களை எண்ணிப்பார்
உன்னை மன்னித்து விட்டார் உன் கடவுள்
நீயும் மன்னித்து விடு.
பகையுள்ள இடத்தில் தெளித்து வாழ் பாச விதைகளை....








All the contents on this site are copyrighted ©.