2012-04-26 15:07:07

அண்டார்டிக் பகுதியில் உருவாகும் வெப்ப நீரினால் பனி உருகி கடல் மட்டம் வேகமாக உயரும் ஆபத்து உள்ளது - ஆய்வறிக்கை


ஏப்ரல்,26,2012. உலகின் தென் துருவத்தில் அண்டார்டிக் பகுதியில் உறைபனி பகுதிகளுக்குக் கீழ் உருவாகும் வெப்ப நீரினால் பனி உருகி உலகின் பல கடல் மட்டங்கள் வேகமாக உயரும் ஆபத்து உள்ளதென்று அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அண்டார்டிக்கின் மேற்குப் பகுதியில் ஒவ்வோர் ஆண்டும் கடலில் மிதக்கும் பனிப் பாறைகள் 23 அடி அளவு கரைந்து வருவதாக இப்புதனன்று வெளியிடப்பட்ட இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
NASA செயற்கைக் கோள் படங்களை ஆய்வு செய்து வரும் பிரித்தானிய அண்டார்டிக் ஆய்வுக் கழகம், பனிப் பாறைகள் உருகுவதற்கு வெப்பமான காற்று மண்டலம் மட்டும் பொறுப்பல்ல, மாறாக, வெப்பமான நீரும் காரணம் என்று கூறியுள்ளது.
அண்டார்டிக் மேற்குப் பகுதியில் உள்ள பனிமலைகள் அனைத்தும் உருகினால், உலகின் அனைத்து கடல்களிலும் நீர்மட்டம் 16 அடி வரை உயரும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.