2012-04-25 14:43:28

பெரு நாட்டில் வன்முறைகள் முடிவுக்கு வருமாறு கர்தினால் சிப்ரியானி அழைப்பு


ஏப்ரல்25,2012. பெரு நாட்டில் வன்முறைகள் முடிவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார் அந்நாட்டுக் கர்தினால் Juan Luis Cipriani.
தலைநகர் லீமாவிலுள்ள ஜப்பானியத் தூதரகத்தில் 71 பிணையல் கைதிகள் காப்பாற்றப்பட்டதன் 15ம் ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்த கர்தினால் Luis Cipriani, இந்தத் தென் அமெரிக்க நாட்டில் வன்முறைகள் ஒருபோதும் இடம் பெறக் கூடாது என்று செபிப்போம் என்று கூறினார்.
1996ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி Tuparac Amaru பயங்கரவாதக் குழு ஜப்பானியத் தூதர் இல்லத்தைக் கைப்பற்றி சுமார் 72 பேரை பிணையலில் வைத்தது. அவ்வியக்கத்தின் 400 கைதிகளை அரசு விடுதலை செய்யும்வரை அவர்களை விடுவிக்கப் போவதில்லை என்றும் அக்குழு எச்சரித்தது.
எனினும், 4 மாதங்கள் கழித்து 1997ம் ஆண்டு ஏப்ரல் 22ம் நாளன்று பெரு நாட்டு இராணுவம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 71 பிணையல் கைதிகள் மீட்கப்பட்டனர். மேலும், இந்நடவடிக்கையில் ஒரு பிணையல் கைதியும், 2 படைவீரர்களும் பயங்கரவாதிகள் 14 பேரும் இறந்தனர்.
வன்முறை எப்போதும் பொய்யுடன் தொடங்குகிறது, இது மற்றவர்களைப் பாதித்து வன்முறைக்கும் இறப்புக்களுக்கும் உரிமை மீறல்களுக்கும் காரணமாகின்றது என்றும் கர்தினால் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.