2012-04-24 15:02:24

கவிதைக் கனவுகள் - கவிஞன் யார்? கலில் கிப்ரான்


கலில் கிப்ரான் எழுதிய கவிஞன் யார்? என்ற கவிதையைத் தமிழாக்கம் செய்திருப்பவர்: சி.ஜெயபாரதன், கனடா.
கவிஞன் யார்?
இந்த உலகிற்கும் எதிர்கால உலகிற்கும்
இணைப்புப் பாலம் அவன்.
தாகமுற்ற ஆத்மாக்கள்
தண்ணீர் குடிக்க வந்திடும்
தூய நீர் ஊற்று அவன்.
எழில் நதி நீர் பாய்ச்சிப்
பசித்தோர் பசி அடக்கும்
பழங்கனி காய்க்கும் மரம் அவன்.

இன்னிசைக் கானம் பாடி
மனத்தாழ்வை ஒழிக்கும் வானம் பாடி!
விண்வெளி முகம்
முழுதும் நிரம்பும் வரை
அடிவான் மீது
மேலும் கீழும்
தோன்றும் வெண்முகில் அவன்.
பின்பு ஒளியை அனுமதிக்க
வாழ்வுத் தள மலர்கள் மேல் படிந்து
இதழ்களை விரிப்பான்!

தெய்வம் அனுப்பிய தேவன் அவன்
மெய்யான உபதேசம்
செய்திட வந்தவன்.
இருள் வெல்லாத
ஒளிச்சுடர் விளக்கு!
புயல் அணைக்காத ஒளி விளக்கு.
காதல் தேவதை
எண்ணை ஊற்றி
இசைக் கீதம் ஏற்றிய தீபம்!

ஏகாந்த வாதி அவன்!
பரிவோடு
எளிய உடை
உடுப்பவன் அவன்!
உள்ளெழுச்சி தனைத்
தூண்டி விட
இயற்கை மடி மீது
அமர்பவன் அவன்!
ஆத்மீகம் வரவேற்கக்
காத்திருந்து
இரவு மௌனத்தில்
தியானிப்பவன்!

தனது இதயத்தில்
விதைகளை நட்டு வைத்து
வன வயல்களில் பரிவு விதை
விதைப்பவன்.
மனித இனம் அவற்றை
அறுவடை செய்யும்
தமக்குணவாய் ஊட்டித்
தான் வளர்வதற்கு!








All the contents on this site are copyrighted ©.