2012-04-13 15:07:19

வாழ்வுக்கு ஆதரவான தவக்கால நடவடிக்கையில் 800க்கும் அதிகமான கருக்கலைப்புகள் தடுக்கப்பட்டன


ஏப்.13,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டில், இத்தவக்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட, “வாழ்வுக்கு ஆதரவான நாற்பது நாள்” என்ற நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளைக் கருக்கலைப்பிலிருந்து காப்பாற்ற முடிந்தது என்று அந்நடவடிக்கையின் இயக்குனர் Shawn Carney கூறினார்.
2007ம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்தத் தவக்கால நடவடிக்கையில், இவ்வாண்டில்தான் அதிகமான கருக்கலைப்புக்களைத் தடுக்க முடிந்தது என்றும் Carney கூறினார்.
இந்த வாழ்வுக்கு ஆதரவான நாற்பது நாள் நடவடிக்கையில், தன்னார்வப் பணியாளர்கள், 250 நகரங்களில் செபம், நோன்பு உட்பட பல்வேறு முயற்சிகளைத் மேற்கொண்டதாகவும், கருக்கலைப்பு செய்வதிலிருந்து 804 கர்ப்பிணிப் பெண்களைத் தடுத்த முடிந்தது எனவும் Carney கூறினார்.







All the contents on this site are copyrighted ©.