2012-04-13 15:09:19

பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான் – கமிலியன் சபை அருள்தந்தை


ஏப்.13,2012. பாகிஸ்தானில் அதிகரித்து வரும் “கவுரவக் கொலைகள்” உட்பட அந்நாட்டில் பெண்களுக்கு எதிரான உரிமை மீறல்கள் அதிகம் இடம் பெறுவதாக Camillian சபை அருள்தந்தை Mushtaq Anjum கூறினார்.
உலகில் பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான நாடுகளுள் ஒன்றாக பாகிஸ்தான் உள்ளது என்று ஃபீதெஸ் செய்தி நிறுவனத்திடம் உரைத்த அருள்தந்தை Anjum, அந்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்படுவதற்கு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
தங்கள் குடும்பங்களுக்கு அவமதிப்பைக் கொண்டு வந்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுக் கொல்லப்பட்ட பெண்கள் 2011ம் ஆண்டில் மட்டும் குறைந்தது 943 பேர் என்று அக்குரு கூறினார்.
சில விவகாரங்களில் பெண்கள் இவ்வாறு கொல்லப்படுவதற்கு முன்னர், அவர்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர் எனவும் அவர் கூறினார்.
மேலும், இந்தியாவில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் 7,563 பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று ஃபீதெஸ் அறிவித்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.