2012-04-12 15:26:08

ஒடிஸா மாநிலத்தில் முதல் முறையாக 10,000க்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்ட உயிர்ப்புப் பெருவிழா கொண்டாட்டம்


ஏப்ரல்,12,2012. கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளைச் சந்தித்துள்ள ஒடிஸா மாநிலத்தில் முதல் முறையாக 10,000க்கும் அதிகமான கிறிஸ்தவர்களும் இந்துக்களும் ஒன்று கூடி உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடினர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
2008ம் ஆண்டு கந்தமால் பகுதியில் இந்து அடிப்படைவாதக் கும்பலால் பெரும் வன்முறைகள் இடம்பெற்ற விஜயா கத்தோலிக்கப் பள்ளியின் திறந்த வெளி அரங்கில் உயிர்ப்புப் பெருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்றபோது, 10000க்கும் அதிகமானோர் அதில் கலந்து கொண்டனர்.
12 மணி நேரம் தொடர்ந்த இந்த விழா கொண்டாட்டங்களில் குழந்தைகள் முதல் வயதானோர் வரை பலரும் கலந்து கொண்டனர்.
உயிர்ப்பின் சாட்சிகளாக வாழும் கிறிஸ்தவர்களிடையே விசுவாசம் இன்னும் ஆழப்படவும், ஒற்றுமை வளரவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்று அப்பகுதியில் பணி புரியும் பங்குத்தந்தை ஜோர்லால் சிங், ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறினார்.









All the contents on this site are copyrighted ©.