2012-04-10 15:03:15

ஒரே பாலினத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்க முயலும் இங்கிலாந்து அரசின் முயற்சிக்குக் கண்டனம்


ஏப்ரல்,10,2012. ஒரே பாலினத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்க முயலும் இங்கிலாந்து அரசின் முயற்சிகள் தேவையற்றவை என குற்றஞ்சாட்டியுள்ளார் இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர் Vincent Nichols.
திருமணம் என்பதற்கு இன்றுவரை வழங்கப்பட்டு வந்துள்ள அர்த்தத்தை மாற்றியமைக்க வேண்டிய ஒரு தேவை இருப்பதாகத் தெரியவில்லை என்றார் அவர்.
ஒரே பாலினத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் முயற்சிகளுக்கு இங்கிலாந்து பிரதமர் David Cameron வழங்கும் விளக்கங்கள் மக்களுக்குப் புரியும்படியாக இல்லை எனவும் குற்றஞ்சாட்டினார் பேராயர் Nichols.
பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் நன்மைகளை வழங்கி வந்த இருபால் திருமண உறவுக்குச் சட்டப்பூர்வமாகக் கொடுக்கப்பட்டு வந்த பாதுகாப்பை மாற்றியமைக்க வேண்டியதன் தேவை எவருக்கும் புரியவில்லை என மேலும் உரைத்தார் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் தலத் திருஅவையின் தலைவர் பேராயர் Nichols.








All the contents on this site are copyrighted ©.