2012-04-03 15:45:10

மெக்சிகோ செனட் அவை சமய சுதந்திரத்திற்கு ஆதரவாக நடவடிக்கை


ஏப்.03,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் மெக்சிகோ நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொண்டு திரும்பிய ஓரிரு நாள்களுக்குள், அந்நாட்டு செனட் அவை, சமய சுதந்திரத்திற்கு ஆதரவாக நடவடிக்கை எடுத்துள்ளது என்று CNS கத்தோலிக்க செய்தி நிறுவனம் அறிவித்தது.
கடந்த மார்ச் 29ம் தேதி, மெக்சிகோ அரசியல் அமைப்பு எண் 29ல் செனட் அவை கொண்டு வந்துள்ள மாற்றங்களின்படி, அந்நாட்டில் சமய சுதந்திரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆலயங்களுக்கு வெளியே அரசின் முன் அனுமதியின்றி சமயக் குழுக்கள் வழிபாடுகளை நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
அத்துடன், மெக்சிகோ நாட்டை விவரிப்பதற்கு இருக்கின்ற விளக்கங்களில் “சமயச்சார்பற்றது” என்ற சொல்லை, அரசியல் அமைப்பு எண் 40ல் சேர்ப்பதற்கும் செனட் அவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
திருத்தந்தையின் மெக்சிகோ நாட்டுக்குத் திருப்பயணம் கடந்த மார்ச் 23 முதல் 26 வரை இடம் பெற்றது.







All the contents on this site are copyrighted ©.