2012-04-03 15:44:11

மியான்மாரில் Suu Kyi கட்சியின் வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது - திருப்பீட சார்பு தினத்தாள்


ஏப்.03,2012. மியான்மாரில் நடைபெற்ற இடைத்தேர்தலில், Aung San Suu Kyi யின் சனநாயக ஆதரவு எதிர்க்கட்சி அமோக வெற்றி அடைந்திருப்பது வரலாற்று சிறப்புமிக்கது என்று சொல்லி, தனது பாராட்டைத் தெரிவித்துள்ளது திருப்பீடச் சார்பு தினத்தாள் L’Osservatore Romano.
“நம்பிக்கையின் இருப்பிடம்” என்ற தலைப்பில் இச்செவ்வாயன்று முன்பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள L’Osservatore Romano, மியான்மார் மக்களாட்சியை நோக்கி முழுவதுமாக மாறுவதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தேர்தல் முடிவுகள், மியான்மாருக்கு குறிப்பிடத்தக்க பலன்களைக் கொண்டு வரும் எனவும், ஐ.நா.வும், ஐரோப்பிய சமுதாய அவையும் அந்நாட்டுக்கு எதிரானப் பொருளாதாரத் தடைகளை நீக்கக்கூடும் எனவும் கூறியுள்ளது அத்தினத்தாள்.
கடந்த இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின்னர், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டதாக இத்தேர்தல் நடைபெற்றுள்ளது என்றும், Suu Kyi நாடாளுமன்றத்துக்குச் செல்வது அந்நாட்டு இராணுவ அதிகாரிகளைப் பொறு்தது உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.