2012-03-31 15:11:23

ஆலயங்களை அழிக்க அழைப்பு விடுக்கும் சவுதி அரேபிய முஸ்லீம் குருவின் அறிக்கைக்கு இந்தியக் கிறிஸ்தவர்கள் கண்டனம்


மார்ச்31,2012. அராபியத் தீபகற்பத்திலுள்ள அனைத்து ஆலயங்களும் அழிக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று, சவுதி அரேபியாவின் பெரிய முஸ்லீம் குரு Sheikh Abdul Aziz bin Abdullah, இந்த மார்ச் மாதத்தின் மத்தியில் கூறியிருப்பதற்கு அனைத்திந்தியக் கிறிஸ்தவ அவை தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இம்முஸ்லீம் குருவின் அறிக்கை, கண்மூடித்தனமானது மற்றும் அரபு நாடுகளில் வாழும் பல கிறிஸ்தவர்களுக்கு ஆபத்தானது என்று அக்கிறிஸ்தவ அவை கூறியது.
அராபிய தீபகற்பத்தில் மட்டுமல்லாமல், பிற நாடுகளில் வாழும் சிறுபான்மை மதத்தவரிலும் இவ்வறிக்கை, பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அனைத்திந்தியக் கிறிஸ்தவ அவையின் தலைவர் ஜோசப் டி சூசா கூறினார்.
சவுதி அரேபியாவிலும், பிற வளைகுடா நாடுகளிலும் வாழும் கிறிஸ்தவரில் பெரும்பாலானோர் இந்தியா மற்றும் பிலிப்பீன்ஸ் நாடுகளைச் சேர்ந்தவர்கள். அப்பகுதியில் வாழும் 35 இலட்சத்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவரில் குறைந்தது 8 இலட்சம் பேர் சவுதி அரேபியாவில் வாழ்கின்றனர்.







All the contents on this site are copyrighted ©.