2012-03-30 14:49:44

மார்ச் 30, 2012. கவிதைக் கனவுகள்.......... கசப்பும் இனிப்பும்


வகுத்துக் கொண்ட வாழ்வில்
கசப்பும் இனிப்பும் சக்கரச் சுழற்சியே.
தப்பிக்க இயலா அனுபவங்கள்.
இன்றோ சுவைகள் மாறிவிட்டன.

இனிப்பை வெறுத்தால்
வாழ்வில் இனிமை கூடும்
கசப்பை மறந்தால்
வாழ்வு கசந்து விடும்.
உடல்கூறு மருத்துவம் எடுத்துரைக்கிறது.

இறைவனும் கசப்பையேத் தேர்ந்து கொண்டார்
மறையுடலாம் திரு அவையின் இனிமைக்காய்.
பாடுகளும் மரணமும்
இறைவனுக்குத் தேவையா?
ஆண்டாண்டான கேள்வி.

கசப்பின்றி இனிப்பில்லையென்றால்
அந்த கசப்பையும் ஏற்க மனிதன்
தயாரில்லையென்றால்,
யார்தான் வழிகாட்டுவது?

இறைவனே இறங்கி வந்தார்,
கசப்பான காடியைச் சுவைத்தார்
இழப்பதிலும் இன்பமுண்டு எனக்காட்ட
உயிர்பலியானார்.








All the contents on this site are copyrighted ©.