2012-03-27 14:55:44

ஹெயிட்டி நாட்டில் நிலநடுக்கத்தால் அழிவுக்குள்ளான கோவில்களை மீண்டும் கட்டியெழுப்ப கத்தோலிக்க உதவி


மார்ச்,27,2012. ஹெயிட்டி நாட்டில் 2010ம் ஆண்டு நிலநடுக்கத்தால் அழிவுக்குள்ளான கத்தோலிக்கக் கோவில்களை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு 31 இலட்சம் டாலர்களை வழங்குகின்றனர் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள், கத்தோலிக்கத் துயர்துடைப்புப்பணி மையங்கள் மற்றும் ஹெயிட்டி ஆயர்கள்.
அழிவுக்குள்ளான கோவிலகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான பணிகள் இவ்வாண்டில் துவக்கப்படும் எனக்கூறும் ஆயர்கள், திருத்தந்தையின் மெக்சிகோ மற்றும் கியூபா நாட்டு திருப்பயணம் இடம்பெறும் வெளையில் இவ்வுதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் நிறைந்தது எனவும் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் மற்றும் உலகக் கத்தோலிக்க உதவி நிறுவனங்களின் இந்த நன்கொடை குறித்து ஹெயிட்டிக்கான திருப்பீடத்தூதுவர் பேராயர் Bernardito Auza, தன் நன்றியையும் மகிழ்ச்சியையும் வெளியிட்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.