2012-03-27 16:18:10

விசுவாசத்தோடு அன்னைமரியாவைப் பின்பற்றி வாழுமாறு கியூப மக்களுக்குத் திருத்தந்தை அழைப்பு


மார்ச்27,2012. பொறுமையாோடும் விசுவாசத்தோடும் அன்னைமரியாவைப் பின்பற்றி வாழுமாறு கியூப மக்களுக்கு அழைப்பு விடுத்தார். கியூப வரலாற்றின் முக்கியமான கட்டங்களிலும் இக்காலத்திலும் கத்தோலிக்கர் ஆற்றும் துணிவான, தன்னலமற்ற தியாகங்கள் பாராட்டுக்குரியவை. கடவுள் பின்னுக்குத் தள்ளப்படும் போது, மனிதனை உபசரிக்காத இடமாக உலகம் மாறும். கடவுளைத் தவிர, நம்க்கு நாமே தூரமாகச் சென்று வெறுமையில் உழல்கிறோம். கடவுளுக்குப் பணிந்து நடப்பது, உண்மைக்கும் மீட்புக்கும் உலகின் கதவுகளைத் திறந்து விடுகின்றது. மீட்பு என்பது மனித விருப்பத்தை கடவுளின் விருப்பத்துக்கு முழுமையாய் ஒத்துப்போகும்படிச் செய்வதில் இருக்கின்றது. அன்னைமரியா தனது பங்கைச் சுதந்திரமாக ஏற்றுக் கொண்டதில் இறைத்திட்டம் நிறைவேறியது. நமது கடவுள் இவ்வுலகில் வருவதற்குத் தமது படைப்புக்களில் ஒன்றின் ஒப்புதலைச் சார்ந்து இருக்க விரும்பினார். மனித சுதந்திரத்தைக் கடவுள் எவ்வளவு தூரம் மதிக்கிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது. திருமணத்தில் வேரூன்றப்பட்ட குடும்பம் சமூதாயத்தின் மற்றும் தலத்திருஅவையின் அடிப்படையான அங்கமாகும். கிறிஸ்து திருஅவையின் மீது கொண்டிருக்கும் அன்பின் காணக்கூடிய அடையாளமாக வாழ்வதற்கு தம்பதியர் அழைக்கப்பட்டுள்ளனர். கியூபாவுக்கு உங்களது இந்தச் சான்று வாழ்வு தேவைப்படுகின்றது. திருமண வாழ்வுக்கு விசுவாசமாக இருங்கள். சமுதாயத்தில் எவ்வித எதிர்ப்புகள் வந்த போதிலும், அமைதி மன்னிப்பு, புரிந்து கொள்ளுதல் ஆகிய பண்புகளுடன், பொறுமையோடும் விசுவாசத்தோடும் அவற்றை ஏற்று வாழுங்கள். அப்போது கடவுளின் நன்மைத்தனம் உங்களில் பிரதிபலிக்கும் என்று மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.