2012-03-27 15:08:29

கவிதைக் கனவுகள் - இறையரசின் இலக்கணம்... அன்றும், இன்றும்


திருத்தலப் பயணமும் தானங்களும்
அருள்வளம் சேர்ப்பது இறையரசு
அன்றைய இலக்கணம் அது
நியாயங்கள் கேட்கும் ஏழையுடன்
தியாகத்தில் இணைவதும் இறையரசு
இன்றைய இலக்கணம் இது

ஏழையைக் கண்டதும் கனிவுடனே
சேவைகள் செய்வது இறையரசு
அன்றைய இலக்கணம் அது
ஏழ்மையின் காரணம் தேடிச்சென்று
வேருடன் அழிப்பதும் இறையரசு
இன்றைய இலக்கணம் இது

தியானத்தின் சிகரத்தை மலைகளிலே
ஞானமாய்த் தேடுதல் இறையரசு
அன்றைய இலக்கணம் அது
நீதியின் குரலினைத் தினம் எழுப்பி
வீதியில் வாழ்வதும் இறையரசு
இன்றைய இலக்கணம் இது








All the contents on this site are copyrighted ©.