2012-03-21 15:03:47

சிரியாவில் சமாதான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியது மனித சமுதாய மனச்சான்றின் கட்டாயமாக உள்ளது - ஐ.நா. பொதுச் செயலர்


மார்ச்,21,2012. நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு மணி நேரமும் அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர் என்றும், இக்கொலைகளை நிறுத்துவது உலகச் சமுதாயத்தின் அவசரக் கடமை என்றும் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
சிரியாவில் தொடர்ந்து வரும் வன்முறைகளைச் சுட்டிக் காட்டி, இச்செவ்வாயன்று இந்தோனேசியாவில் செய்தியாளர்களிடம் பேசிய பான் கி மூன் இவ்வாறு கூறினார்.
சிரியாவின் பிரச்சனைகளைத் தீர்க்க பல நாடுகள் முயன்று வருவதைப் பாராட்டிப் பேசிய ஐ.நா. பொதுச் செயலர், அனைத்துலக நாடுகளும் ஒன்றிணைந்து முயற்சி செய்தால் மட்டுமே இப்பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்றும் கூறினார்.
ஐ.நா. சார்பாகவும், அரபு நாடுகள் சார்பாகவும் சிரியாவின் தமாஸ்கு நகரில் முயற்சிகள் மேற்கொண்டுவரும் இரு குழுக்களின் செயல்பாடுகளை விளக்கிய பான் கின் மூன், இன்னும் பல நாடுகளில் இருந்து சமாதான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியது மனித சமுதாய அரசியல், மற்றும் மனச்சான்றின் கட்டாயமாக உள்ளது என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.