2012-03-21 15:03:58

அதிகம் பேர் வேலை செய்யும் நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு


மார்ச்,21,2012. உலகில் அதிகம் பேரை வேலைக்கு அமர்த்தியுள்ள நிறுவனம் எது என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. சுமார் 32 இலட்சம் பேர் அமெரிக்க இராணுவத்தில் வேலை பார்க்கின்றனர்.அடுத்த இடத்தில் இருப்பது சீன இராணுவம். இதில் இருப்பவர்களோ 23 இலட்சம் பேர்.
பல்பொருள் அங்காடிகளை நடத்தும் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்தில் மொத்தம் 21 இலட்சம் பேரும், துரித உணவு விடுதிகளை உலகெங்கும் நடத்திவரும் McDonald’s நிறுவனத்தில் 19 இலட்சம் பேரும் வேலை பார்க்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ள பிரிட்டனில் உள்ள தேசிய சுகாதார சேவையில் 17 இலட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். சீனாவின் தேசிய பெட்ரோலிய நிறுவனத்தில் 16 லட்சம் பேரும், மற்றொரு அரச நிறுவனமான மின்தொகுப்பு நிறுவனத்தில் 15 இலட்சம் பேர் வேலை பார்க்கின்றனர்.
இந்தப் பட்டியலில் 14 இலட்சம் ஊழியர்களைக் கொண்ட இந்திய ரயில்வேவுக்கு எட்டாவது இடமும், 13 இலட்சம் பேர் கொண்ட இந்திய இராணுவத்துக்கு 9வது இடமும் கிடைத்துள்ளன.
ஆப்பிள் ஐ போன், ஐ பேட் போன்றவைகளைத் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள Taiwan நாட்டைச் சேர்ந்த பாக்ஸ்கான் (Foxconn) பத்தாவது இடத்தில் இருக்கிறது. அதன் ஊழியர்களின் எண்ணிக்கை 12 இலட்சம்.








All the contents on this site are copyrighted ©.