2012-03-20 15:15:16

பங்களாதேஷில் சிறாருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும், ஊட்டச்சத்து வழங்குவதற்கு WFP திட்டம்


மார்ச்20,2012. பங்களாதேஷில் சிறாருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும், தாய்மாருக்கும் ஊட்டச்சத்து வழங்கும் புதிய திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளது WFP என்ற ஐ.நா.வின் உணவுத் திட்ட அமைப்பு.
ஏறக்குறைய 5 வயதுக்குட்பட்ட 20 விழுக்காட்டுச் சிறார் ஊட்டச்சத்துக் குறைவால் வாடும் Cox’s Bazar மாவட்டத்தில் இத்திட்டம் தொடங்கப்படுவதாகவும், அம்மாவட்டத்தில் பரவலாக கல்வியறிவை வழங்க முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் WFP அமைப்பின் பங்களாதேஷ் நாட்டுக்கானப் பிரதிநிதி Christa Räder கூறினார்.
இத்திட்டத்தின் மூலம் 14,800 சிறாருக்கும் 2,000 கர்ப்பிணித் தாய்மாருக்கும் உதவுவதற்கு WFP திட்டமிட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.