2012-03-20 15:14:14

சாலமன் தீவுகள் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை நிறுத்தப்பட ஐ.நா. வலியுறுத்தல்


மார்ச்20,2012. சாலமன் தீவுகள் நாட்டில் வன்முறையினால் பாதிக்கப்படும் பெண்களுக்கும் நீதி விசாரணையில் பாலினப் பாகுபாட்டினால் பாதிக்கப்படுவோருக்கும் பாதுகாப்பு அளிக்கப்படுமாறு ஐ.நா.மனித உரிமைகள் வல்லுனர் ஒருவர் வலியுறுத்தினார்.
பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து கண்காணிக்கும் ஐ.நா.வின் சிறப்புத் தூதர் Rashida Manjoo, பசிபிக் பெருங்கடலிலுள்ள சாலமன் தீவுகள் நாட்டில் 5 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்னர் வெளியிட்ட அறிக்கையில், இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
15க்கும் 49 வயதுக்கும் உட்பட்ட பெண்களில் 64 விழுக்காட்டினர் உடல்ரீதியான அல்லது பாலியல் ரீதியான வன்முறைகளை அனுபவித்துள்ளனர் என்று தெரிவித்தார் Manjoo.
ஏறக்குறைய ஆயிரம் தீவுகளைக் கொண்ட சாலமன் தீவுகள் நாட்டில் உள்கட்டமைப்பு, மனித மற்றும் நிதி வளங்கள் பற்றாக்குறை, நன்கு படித்த நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் குறைபடுதல் போன்றவைகளால் பெண்களுக்குப் போதுமான பாதுகாப்பு இல்லை என்று Rashida Manjoo மேலும் கூறினார்







All the contents on this site are copyrighted ©.