2012-03-16 15:19:05

அணுசக்திக்கு எதிரான உணர்வை இத்தவக்காலத்தில் வளர்த்துக் கொள்ளுமாறு ஜப்பான் ஆயர் பேரவைத் தலைவர் வலியுறுத்தல்


மார்ச்16,2012. அணுசக்தி உட்பட உலகப் பொருட்களில் அதிகம் சார்ந்து இருப்பதை விலக்கி நடப்பதற்கு தவக்காலம் விசுவாசிகளை வழிநடத்திச் செல்ல வேண்டுமென்று ஜப்பான் ஆயர் பேரவைத் தலைவர் கூறினார்.
இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவுக்கு விசுவாசிகளைத் தயாரிக்கும் விதமாக மேய்ப்புப்பணி அறிக்கையை வெளியிட்டுள்ள பேராயர் Leo Jun Ikenaga, செபமும் அன்பும் மட்டுமே மக்களை இறைவனிடம் இட்டுச் செல்லும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Fukushima அணுமின்நிலைய விபத்து நடந்த ஓராண்டுக்குப் பின்னர், ஜப்பான் சமுதாயம் மீண்டும் சிந்திக்கத் தொடங்கியுள்ளது, ஆயினும் இச்சிந்தனையானது மிகுந்த வேதனைக்கு ஊற்றான அணுசக்தியைச் சார்ந்து இருப்பதில் முடிவடைகின்றது என்று கூறியுள்ளார் பேராயர்.
இந்த உலகப் பொருள்களின் மீது கொண்டிருக்கும் அதீதப் பற்றுக்களிலிருந்து தங்களை விடுவிக்குமாறு இத்தவக்காலத்தில் கத்தோலிக்கர்களை வலியுறுத்துவதாகக் கூறியுள்ளார் பேராயர் Ikenaga.







All the contents on this site are copyrighted ©.