2012-03-13 15:37:14

இளையோரிடையே மேற்கொள்ளப்பட்ட பணீகளுக்கென சலேசிய சபையினருக்கு மத்ரித் மேயர் விருது


மார்ச்,13,2012. இளையோரை ஊக்கப்படுத்துவதிலும் அவர்களுக்குக் கல்வி கற்பிப்பதிலும் உலகின் எண்ணற்ற நாடுகளின் அனைத்து மூலைகளிலும் சலேசிய மறைப்பணியாளர்கள் ஆற்றி வரும் பணிகளைப் பாராட்டி இஸ்பெயினின் உயரிய விருது ஒன்றை வழங்கினார் தலைநகர் மத்ரித் மேயர் Ana Botella.
Real Madrid என்ற அமைப்பால் உருவாக்கப்பட்ட இவ்விருது, இளையோரின் வாழ்வில் அதிக அக்கறைச் செலுத்தி உழைப்போருக்கு என வழங்கப்படுகிறது.
கடந்த 135 ஆண்டுகளாக 131 நாடுகளில் பள்ளிகள், இளையோர் மையங்கள் ஆகியவை மூலம் சேவையாற்றி வரும் சலேசிய சபையினரின் பணிகளைக் கௌரவிக்கும் விதமாக இவ்விருது வழங்கப்படுவதாக அறிவித்தார் மத்ரித் மேயர் Botella







All the contents on this site are copyrighted ©.