2012-03-12 15:00:18

நைஜீரியாவில் மீண்டும் ஒரு கத்தோலிக்கக் கோவில் தாக்கப்பட்டது


மார்ச்,12,2012. நைஜீரியாவின் Jos நகரின் கத்தோலிக்கக் கோவிலுக்கு எதிராக நடத்தப்பட்ட தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஞாயிறு திருப்பலி துவங்கிய சிறிது நேரத்திலேயே புனித Finbar கோவிலுக்குள் நுழைய முயன்ற ஒரு வாகனத்தை காவலாளிகள் தடுத்து நிறுத்தியவுடன், வெடிகுண்டை இயக்கச்செய்து தன்னையும் மாய்த்துக் கொண்டார் அந்த வாகன ஓட்டுனர்.
பத்து பேரின் உயிரிழப்புக்கு காரணமான இத்தாக்குதலில் கோவிலின் கூரையும் ஜன்னல்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளன. கோவிலில் காவலுக்கு நின்ற சில படைவீரர்களும் எண்ணற்ற விசுவாசிகளும் இவ்வெடிகுண்டு தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.
நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் அண்மைக்காலங்களில் தொடர்ந்து வரும் மோதலகளின் ஒரு பகுதியாக இத்தாக்குதல் நோக்கப்படுகிறது.
கடந்த மாதம் இதே Jos நகரின் கோவில் ஒன்று ஞாயிறு வழிபாட்டின்போது தாக்கப்பட்டதில் ஒரு குழந்தை உட்பட மூவர் உயிரிழந்ததும் பலர் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.