2012-03-09 16:11:06

குறிக்கோளுடன் வாழ்பவர்களை இளம்வயதில் தழுவும் மரணம்


குறிக்கோளுடன் வாழ்பவர்கள் அதிகம் சம்பாதித்தாலும் நிம்மதியில்லாமல், இளம் வயதில் மரணமடைய கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இலண்டனைச் சேர்ந்த நோத்ருதாம் பல்கலைக்கழக வல்லுனர்கள், ஆக்ஸ்போர்ட், ஹார்வர்டு, யேல் போன்ற பல்கலைக்கழகங்களில் அதிகம் படித்த 717 பேரிடம் நடத்திய ஆய்வில் இவ்வாறு தெரிய வந்துள்ளது.
சிறு வயது முதலே அதிக குறிக்கோளுடன் படித்து, உயர் பதவிகளை வகித்த பலர் முன்னேற வேண்டும் என்ற ஆர்வத்தால், உறவுகளை அதிகம் வளர்ப்பதில்லை. இன்னும் சிலர் முன்னேற வேண்டும் என்ற வெறியில், உடல் நலத்தைக்கூட கவனிப்பதில்லை. வாழ்வில் உயர வேண்டும் என்ற ஆர்வத்தை, இவர்கள் தங்கள் உடல் நலத்திலும், சமூக உறவிலும் காண்பிக்காததால், அதிகக் குறிக்கோள் இல்லாமல் வாழ்பவர்களை விட, இவர்கள் குறைந்த மகிழ்ச்சியையே அனுபவிக்கின்றனர். ஓரளவு மகிழ்ச்சியை அனுபவிப்பவர்களும், குறைந்த வயதில் இறக்கின்றனர் என இவ்வாய்வில் தெரிய வந்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.