2012-03-08 15:30:53

ஹோலி பண்டிகையை ஒட்டி, மரங்களை வெட்டுவது நிறுத்தப்பட வேண்டும்


மார்ச்,08,2012. ஹோலி பண்டிகையை ஒட்டி, மக்கள் மரங்களை வெட்டுவதும், மரக்கிளைகளை ஒடிப்பதும் நிறுத்தப்பட வேண்டிய ஒரு பழக்கம் என்று இயற்கை ஆவலாரான இயேசு சபை அருள்தந்தை இராபர்ட் அத்திக்கல் கூறினார்.
வசந்த காலம் வந்துவிட்டதை உணர்த்தும் வகையில் இந்தியாவின் பல இடங்களில் இவ்வியாழனன்று கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகையின்போது எரி நெருப்பை உருவாக்கும் பழக்கம் உள்ளது. இந்த நெருப்பை உண்டாக்க மரங்களும், மரக் கிளைகளும் அர்த்தமின்றி வெட்டப்படுகின்றன என்று அருள்தந்தை அத்திக்கல் அவர்களும் இன்னும் பிற இயற்கை ஆர்வலர்களும் குரல் எழுப்பியுள்ளனர்.
‘மரங்களின் நண்பர்கள்’ என்ற பொருள்படும் Tarumitra என்ற இயற்கைப் பாதுகாப்பு அமைப்பின் தலைவராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்து வரும் அருள்தந்தை அத்திக்கல், Patna, Gaya, Muzaffarpur ஆகிய மாவட்டங்களில் மரங்கள் வெட்டப்படுவது பெருமளவில் அதிகரித்துள்ளது என்பதைச் சுட்டிக் காட்டினார்.
தீமைகள் அழிகின்றன என்பதைச் சுட்டிக்காட்ட எரி நெருப்பு உருவாக்குவது நமது பண்டைய பழக்கம் எனினும், இவைகளை உருவாக்க மரங்களை அழிப்பதற்குப் பதில் மற்ற வழிகளை மக்கள் கண்டுபிடித்தால், நமது இயற்கையைப் பாதுகாக்க முடியும் என்று Ashook Ghosh என்ற மற்றொரு இயற்கை ஆர்வலரும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.