2012-03-07 15:57:40

ஆண், பெண் உறைவைப் பற்றிய எண்ணங்களை மாற்ற எந்த ஓர் அரசுக்கோ, சபைகளுக்கோ உரிமை இல்லை - இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள்


மார்ச்,07,2012. திருமணத்தின் அடிப்படை உண்மையான ஆண், பெண் உறைவைப் பற்றிய எண்ணங்களை மாற்ற எந்த ஓர் அரசுக்கோ, சபைகளுக்கோ உரிமை இல்லை என்றும், இந்த உண்மை பொதுமக்களின் கருத்துக்கு விடப்படும் உண்மை அல்ல என்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் அறிக்கை விடுத்துள்ளனர்.
ஒரே பாலின உறவுகளில் வாழும் தம்பதியருக்கு சட்டப்பூர்வமான அனைத்து உரிமைகளையும் வழங்குவது குறித்து பிரித்தானிய பாராளுமன்றம் விவாதித்து வரும் வேளையில், அந்நாட்டில் உள்ள கத்தோலிக்க ஆயர்கள் தங்கள் எண்ணங்களைத் தொகுத்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் உள்ள 2500க்கும் அதிகமான கோவில்களில் வருகிற ஞாயிறன்று திருப்பலிகளில் வாசிக்கப்படும் என்று ICN கத்தோலிக்கச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் பேரவைத் தலைவரான பேராயர் Vincent Nichols, மற்றும் Southwark பேராயர் Peter Smith இருவரும் கையெழுத்திட்டுள்ள இந்த அறிக்கை, அண்மையில் ஸ்காட்லாந்து கர்தினால் Keith O’Brien கூறிய கருத்துக்களை அடுத்து வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.