2012-03-06 15:24:00

கிராமப்புறப் பெண்களின் சார்பாக திருப்பீடத்தின் குரல் ஐ.நா.வில்


மார்ச்,06,2012. கிராமப்புறப் பெண்களின் கைகளைப் பலப்படுத்தும் பாதையில், ஏழ்மை மற்றும் பசி அகற்றலும், வளர்ச்சியை ஊக்குவித்தலும், இன்றைய சவால்களை எதிர்கொள்ள கற்பிப்பதும் மிக முக்கிய கூறுகளாக உள்ளன என்கிறது ஐ.நா.விற்கான திருப்பீடத்தின் நிரந்தரப்பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட்டின் செய்தி.
'இரண்டாயிரத்தின் பெண்கள்:21ம் நூற்றாண்டிற்கான அமைதி, வளர்ச்சி மற்றும் பாலின சரிநிகர் தன்மை' என்ற தலைப்பில், இச்செவ்வாயன்று நடையெற்ற ஐ.நா. பொது அவையின் 23வது சிறப்பு அவைக்கூட்டத்தில் பேராயர் சுள்ளிக்காட்டின் சார்பில் உரையாற்றிய திருப்பீட நிரந்தரப் பார்வாவையாளர் அலுவலகத்தின் அங்கத்தினர் Dianne Willman, ஊதியமற்ற நீண்ட நேர வேலை, சுகாதாரமற்ற சூழல்கள், போதிய சத்துணவின்மை, குடிநீர் வசதியின்மை, நல ஆதரவு வசதியின்மை, பாகுபாட்டுடன் நடத்தப்படல், வன்முறைக்கு உள்ளாக்கப்படுதல் என பல சவால்களைக் கிராப்புற பெண்கள் எதிர்நோக்க வெண்டியுள்ளது என்ற கவலையை வெளியிட்டார்.
தங்கள் குடும்பங்களைக் காப்பாற்ற நகர்களுக்கு குடிபெயரும் கிராமப்புற பெண்கள் சுரண்டப்படும் நிலைக்கு தள்ளப்படுவதையும் சுட்டிக்காட்டினார் திருமதி Willman.
சமூகத்தில் பெண்களின் முக்கியப் பங்களிப்பு அங்கீகரிக்கப்படுவதுடன், தங்களைச் சுற்றியுள்ள உலகில் நல்லதொரு பாதிப்பை ஏற்படுத்த அவர்களுக்கு உதவ வேண்டிய சமூகத்தின் கடமையையும் வலியுறுத்தினார் ஐநாவிற்கான திருப்பீட அலுவலகத்தின் அங்கத்தினரான இவர்.
இன்றைய உலகம் எதிர்நோக்கும் சவால்களுக்கான தீர்வு கிராமப்புற பெண்களின் வளர்ச்சியைச் சார்ந்து உள்ளது என்ற ஐநா பொதுச்செயலரின் அறிக்கையையும் மேற்கோள்காட்டி உரையாற்றினார் Willman.








All the contents on this site are copyrighted ©.