2012-03-03 13:02:45

உலகில் 200 கோடிக்கு மேற்பட்ட மக்களுக்குச் சமய சுதந்திரம் மறுக்கப்படுகின்றது - வத்திக்கான் உயர் அதிகாரி


மார்ச்03,2012. உலகில் 200 கோடிக்கு மேற்பட்ட மக்களுக்குச் சமய சுதந்திரம் மறுக்கப்படுகின்றது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவிலுள்ள ஐ.நா. தலைமை அலுவலகங்களுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி, ஐ.நா.மனித உரிமைகள் அவையில் பேசிய போது இவ்வாறு தெரிவித்தார்.
உலகில் அதிகரித்து வரும் மதங்கள் மீதான கட்டுப்பாடுகள் 220 கோடிக்கு அதிகமான மக்களைப் பாதித்துள்ளன என்றுரைத்த பேராயர் தொமாசி, பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கைகளுக்கும் அவை அன்றாடம் அமல்படுத்தப்படும் விதத்திற்குமான இடைவெளி அதிகரித்து வருகிறது எனவும் குறிப்பிட்டார்.
சமுதாயத்துக்கு மதங்கள் அச்சுறுத்தலாக இல்லை, மாறாக அவை வளங்களாக இருக்கின்றன, அவை குடிமக்களின் வளர்ச்சிக்கும் ஒவ்வொருவரின் நன்மைக்கும் உதவுகின்றன என்றும் பேராயர் தொமாசி தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.