2012-03-02 15:06:02

பங்களாதேஷில் வெப்பநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கு


மார்ச்02,2012. இயற்கை வளங்கள் திறமையாகக் கையாளப்படுவதும் நிர்வகிக்கப்படுவதுமே, வளரும் நாடுகளில் வெப்பநிலை மாற்றத்தின் பாதிப்புக்களை எதிர்கொள்வதற்கு இன்றியமையாதவை என்று பன்னாட்டுக் கருத்தரங்கின் வல்லுனர்கள் கூறினர்.
“இயற்கை வளங்களை நிர்வகிப்பதும், வெப்பநிலை மாற்றமும்” என்ற தலைப்பில் இவ்வியாழனன்று பங்களாதேஷிலுள்ள Khulna பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் இவ்வாறு கூறினர் வல்லுனர்கள்.
பிரிட்டன் அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில், பிரிட்டன், இந்தியா, இலங்கை, கானா, நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் ஐம்பது வல்லுனர்கள் கலந்து கொண்டனர்.
பங்களாதேஷில், வெப்பநிலை மாற்றத்தால், நூற்றுக்கணக்கான ஆறுகளில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது என்றும், ஆறுகளில் கடல்நீர் கலப்பதால் விளைநிலங்களும், பல்வேறு உயிரின வாழ்வும் அழிக்கப்படுகின்றன என்றும் Khulna பல்கலைக்கழக துணைவேந்தர் Mohammad Saifuddin Shah இக்கருத்தரங்கில் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.