2012-02-28 14:58:04

அச்சம் காரணமாக அகமதாபாத் கிறிஸ்தவர்கள் குடிபெயர்வு


பிப்.28,2012. சுவரால் சூழப்பட்ட அகமதாபாத் நகரில் வாழ்ந்து வந்த கிறிஸ்தவர்கள், அச்சம் காரணமாக அந்நகரின் மேற்குப்பகுதியில் குடியேறி வருவதாக தலத்திருஅவை தெரிவிக்கின்றது.
குஜராத்தின் கோத்ரா தாக்குதல்களுக்குப் பின், கடந்த 10 ஆண்டுகளில் ஏறத்தாழ 65 விழுக்காட்டு கிறிஸ்தவர்கள் அகமதாபாத் நகருக்குள்ளேயே மேற்கு பகுதியில் குடிபெயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் நகரின் சில பகுதிகளில் அவ்வப்போது கலகங்கள் வெடிப்பதால், தங்கள் குழந்தைகளும் வன்முறைகளைப் பின்பற்றக்கூடும் என்று அஞ்சும் கிறிஸ்தவர்கள், நகரின் மேற்கு பகுதிக்குக் குடிபெயர்ந்து வருவதாக ஹன்சோல் பங்கு குரு Joseph Appaeoo கூறினார்.
அகமதாபாத்தின் புனித ஜோசப் காலனி, கோம்டிபூர் மற்றும் மிர்சாபூர் ஆகிய பகுதிகளில் பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்த கிறிஸ்தவர்கள் தற்போது அச்சம் காரணமாக நகரின் மேற்கு பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளதாக தலத்திருஅவை அதிகாரிகள் தெரிவித்தனர்.








All the contents on this site are copyrighted ©.