2012-02-24 15:05:45

தேவநிந்தனை சார்ந்த பிரச்சனைகளைத் தீர்க்கப் புதிய புத்தகம் உதவும் – பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்


பிப்.24,2012. பல்சமய உரையாடலை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் பாகிஸ்தானில் வெளியாகியுள்ள புத்தகம், அந்நாட்டில் முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே நிலவும் பதட்டநிலைகள் குறைவதற்கு உதவும் என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர் Abid Hassan Minto கூறினார்.
“முஸ்லீம்கள் கேட்கிறார்கள், கிறிஸ்தவர்கள் பதில் சொல்கிறார்கள்” என்ற தலைப்பில், ஜெர்மன் நாட்டு இயேசு சபை அருள்தந்தை Christian Troll எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் இவ்வாறு பேசினார் Minto.
பாகிஸ்தானில் தேவநிந்தனை குறித்த குற்றச்சாட்டுக்களையொட்டி, முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே பதட்டநிலைகள் நிலவி வருகின்றன. கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Muslim Swalat, Masihi Jwabat என்ற இப்புத்தகமானது 7 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.