2012-02-20 15:40:59

கவிதைக் கனவுகள்...... எச்சரிக்கை


கணனியை மடியில் வைத்து
கவிதை எழுத தட்டச்சை தடவினேன்
வைரஸ் வைரஸ் என்ற எச்சரிக்கை
எச்சரிக்கை என்ற எழுத்துக்கள்
எனது எண்ணங்களை எங்கோ அழைத்துச் சென்றன.
வெளிநாடுகளில் கறுப்புப் பணப் பதுக்கல்
எழுநூறு இந்தியர் பட்டியலில்
எண்பது பேரிடம் விசாரணை
438 கோடி ரூபாய் வருமான இருட்டடிப்பு
138 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு
18 பேருக்கு 24 கோடியே 66 இலட்சம் ரூபாய் அபராதம்
பதுக்கல் பேர்வழிகளுக்கு ஓர் எச்சரிக்கை இது.
15 ஆண்டு நிறைவு கண்டது (பிப்.17,2012)
அணுப் பரிசோதனை தடை ஒப்பந்தம்.
182 நாடுகள் ஆதரவு கையெழுத்து
157 நாடுகள் அமலாக்கம்
அணுப் பரிசோதனை சுற்றுச்சூழலுக்கு நஞ்சு
அரசியல் சூழலுக்கு ஆபத்து
விதைக்கின்றது பயத்தை, தனிமையை.
அணுப் பரிசோதனை தடை ஒப்பந்தம்
அமலுக்குவரத் தேவை எட்டு நாடுகளின் கையெழுத்து
அகிலத்தில் இன்னும் 22 ஆயிரத்துக்கு அதிகமான
அணு ஆயுதங்கள்.
அமெரிக்காவும் இரஷ்யாவும் இன்னும் இருப்பில்
இருபதாயிரம் அணுகுண்டுகள்.
எச்சரிக்கை மானுடத்துக்கு!.
அணு ஆயுதமற்ற உலகம்
அனைவருக்கும் பாதுகாப்பானது வளமையானது
ஆக்க அழைக்கிறார்
பன்னாட்டுச் செயலர் பான் கி மூன்.
அணுப் பயமற்ற உலகம்
அமைதியான உறைவிடம்







All the contents on this site are copyrighted ©.