2012-02-18 15:40:47

வருகிற அக்டோபர் 21ல் ஏழு அருளாளர்களுக்குப் புனிதர் பட்டம்


பிப்.18,2012. 22 புதிய கர்தினால்களுக்கு சிவப்புத் தொப்பியும், மோதிரமும் வழங்கி, அவர்களுக்குரிய ஆலயத்தையும் குறித்த திருவழிபாட்டை நிறைவு செய்த திருத்தந்தை, அதன் பின்னர், ஏழு அருளாளர்களைப் புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கான வாக்கெடுப்பு கூட்டத்தையும் புதிய கர்தினால்களுடன் நடத்தினார்.
இதற்கான இரகசிய வாக்கெடுப்பில் இப்புதிய கர்தினால்கள் கலந்து கொண்டனர்.
-இயேசு சபையின் மறைசாட்சி அருள்திரு Giacomo Berthieu, பிரான்சில் 1838ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி பிறந்தார். இவர், மடகாஸ்கர் நாட்டின் Ambiatibe ல் 1896ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி கொல்லப்பட்டார்.
-பிலிப்பீன்சில் 1654ம் ஆண்டு பிறந்த பொதுநிலையினரான வேதியர் Pedro Calungsod, Marianne தீவின் Guam ல் 1672ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார்.
-நாசரேத் திருக்குடும்ப சபை மற்றும் ஆண்டவரின் பணியாளர்கள் சபைகளை ஆரம்பித்த அருட்பணி Giovanni Battista Piamarta, இத்தாலியின் பிரேஷாவில் 1841ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பிறந்தார். இவர் ரேமேதெல்லோவில் 1913ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி இறந்தார்;
-போதிக்கும்பணியின் மறைபோதக சகோதரிகள் சபையை தோற்றுவித்த Maria del Monte Carmelo, இஸ்பெயினின் Vic ல், 1848ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி பிறந்தார். மத்ரித்தில் 1911ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி இறந்தார்;
-நியுயார்க்கின் Syracuse புனித பிரான்சிஸ் மூன்றாம் சபை சகோதரிகள் சபையின் அருட்சகோதரி Maria Anna Cope, ஜெர்மனியின் Heppenheim ல் 1838ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி பிறந்தார். Molokai அன்னை Marianne என்றழைக்கப்படும் இவர், 1918ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி, Molokai ல் இறந்தார்;
-பொதுநிலை விசுவாசியான, அமெரிக்க ஐக்கிய நாட்டின் Auriesville ல், 1656ம் ஆண்டு பிறந்த Caterina Tekawitha, கனடாவின் Sault ல்1680ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி இறந்தார்;
- பொதுநிலை விசுவாசியான ஜெர்மனியின் Mindelstetten ல், 1882 ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி பிறந்த Anna Schaffer, 1925ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி இறந்தார்.
இவர்கள் எழுவரும் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுவது குறித்து இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது
இவர்கள் வருகிற அக்டோபர் 21ம் தேதி ஞாயிறன்று புனிதர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்று இக்கூட்டத்தின் இறுதியில் அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.







All the contents on this site are copyrighted ©.