2012-02-18 15:41:42

கொடைகளை இறைவனிடமிருந்து இலவசமாகப் பெற்றதை ஏற்று அவற்றைப் பிறரன்பிலும் சேவையிலும் வெளிப்படுத்த வேண்டும் - புதிய ஹாங்காங் கர்தினால்


பிப்.18,2012. இன்றைய சமுதாயத்தில், இளைய சகோதர சகோதரிகளின் பொருளாதாரத் தேவைகளை மட்டுமல்ல, அவர்கள் இறைவனின் குழந்தைகள் என்ற உரிமையையும் சுதந்திரத்தையும் வழங்குவதில் நாம் ஆர்வம் காட்ட வேண்டுமென்று புதிய ஹாங்காங் கர்தினால் John Tong Hon கூறினார்.
இச்சனிக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்ட இவர் வெளியிட்ட தவக்காலச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
நாம் கொடைகளை இறைவனிடமிருந்து இலவசமாகப் பெற்றதை ஏற்று அவற்றைப் பிறரன்பிலும் சேவையிலும் வழங்க முன்வர வேண்டும் என்றும் புதிய கர்தினால் John Tong Hon கேட்டுக் கொண்டார். தான் கர்தினாலாக உயர்த்தப்பட்டிருப்பது, திருத்தந்தை அனைத்துச் சீன மக்கள்மீது கொண்டிருக்கும் அன்பைக் காட்டுகின்றது என்றும் அவர் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.