2012-02-18 15:44:37

குறைந்து வரும் மார்பகப் புற்று நோய்


பிப்.18,2012. பெண்களின் உயிரைக் குடிக்கும் மார்பகப் புற்றுநோய் ஐரோப்பாவில் குறைந்து வருவதாக சுவிஸ் மற்றும் இத்தாலி ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கடந்த 2002 – 2006ம் ஆண்டில் மார்பகப் புற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 7 விழுக்காடாகக் குறைந்திருந்தது. பின்பு இவ்வெண்ணிக்கை 16.7 விழுக்காடாக ஆகியிருந்தது. 2006க்கும்– 2012 ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஒன்பது விழுக்காடாக உள்ளது எனவும் கூறப்படுகிறது.
வடக்கு ஐரோப்பிய நாடுகளில்தான், அதிகமான எண்ணிக்கையில் அதாவது 38 விழுக்காட்டுப் பெண்கள் மார்பகப் புற்றுநோயால் இறந்தனர். அதுவும் இளம் பெண்களிடையே இம்மரணம் ஏற்பட்டதாக லுசோன் பல்கலைக்கழகத்தின் சமூகம் மற்றும் தடுப்பு மருந்துக்கான மையமும், இத்தாலியின் மிலான் நகரில் உள்ள மாரியோ நெக்ரி மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்தது.







All the contents on this site are copyrighted ©.