2012-02-17 14:38:14

2012ம் ஆண்டுக்கான வத்திக்கான் வரவு செலவுப் பட்டியல் குறித்து கர்தினால்கள் குழு நம்பிக்கை


பிப்.17,2012. உலகளாவிய அளவில் காணப்படும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், 2012ம் ஆண்டுக்கான வத்திக்கான் வரவு செலவுப் பட்டியல், நம்பிக்கை தருவதாக இருக்கின்றது என்று சர்வதேச கர்தினால்கள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
திருப்பீடத்தின் நிர்வாக மற்றும் பொருளாதார விவகாரங்களில் ஆலோசனை வழங்கும், பல நாடுகளைச் சேர்ந்த கர்தினால்கள் குழு, 2011ம் ஆண்டுக்கான வரவு செலவு இறுதி அறிக்கை தயாரிப்பு மற்றும் 2012ம் ஆண்டுக்கான வரவு செலவு விபரங்கள் குறித்து இச்செவ்வாய், புதன் தினங்களில் நடத்திய கூட்டத்திற்குப் பின்னர் இவ்வாறு அறிவித்துள்ளது.
11 கர்தினால்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், உலக அளவில் நிலவும் பொருளாதார நெருக்கடி, வத்திக்கானின் பொதுப் பொருளாதாரத்தையும் பாதித்திருப்பது குறித்த கவலையும் தெரிவிக்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.