2012-02-16 12:58:01

கவிதைக் கனவுகள் .... நேற்றும் இன்றும்


கிழக்கில் கீழ்வானம் சிவக்கச்
திரியில்லாத் தீபமாய் மேற்கு
நோக்கி நகரும் அந்த வெப்பக்கோளம்
மீண்டும் கிழக்கில் பின் மேற்கில்
நேற்றும் இன்றும் நாளையும்
இப்படித்தான் இதன் பயணம்.

காலையில் கண் கவர்ந்த மலர்கள்
மாலையில் தலை தாழ்ந்து கிடந்தன
நேற்று நான் பார்த்த வனம்
இன்று மரமில்லாப் பாலைவனம்
நேற்று நான் பார்த்த ஆறு
இன்று நீரில்லா மைதானம்
நேற்று நான் வாசித்த தாள்கள்
இன்று மிதிபடும் குப்பைகள்
நேற்று நான் சந்தித்த பணக்காரர்
இன்று கையேந்தும் ஏழை
நேற்று மேடையில் முழங்கிய அரசியல்வாதி
இன்று சிறையில் முடங்கிக் கிடக்கும் கைதி

நேற்று இன்று, இன்று நாளை
மாறுகிறது வாழ்க்கை
நேற்று இருந்தார் இன்று இல்லை
இன்று இருப்பார் நாளை இல்லை –ஆனால்
இக்கணம் மட்டும், இமைப் பொழுது மட்டும்
இருப்பது உறுதி
இப்பொழுதில் வாழ், நாளும் வளரும் ஞானம்.







All the contents on this site are copyrighted ©.