2012-02-15 15:37:24

புனித அகஸ்தின் பேராலயத்தைப் புதுப்பிக்கும் பணிக்கு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தனிப்பட்ட வகையில் நிதி உதவி


பிப்.15,2012. திருஅவையின் புகழ்பெற்ற புனிதர்களில் ஒருவரான புனித அகஸ்தின் மட்டில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கொண்டுள்ள மரியாதையை உலகம் அறியும், அப்புனிதரின் பெயாரால் கட்டப்பட்ட பேராலயத்தைப் புதுப்பிக்கும் பணிக்கு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தனிப்பட்ட வகையில் நிதி உதவி செய்துள்ளார் என்று ஆப்ரிக்க நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.
ஆப்ரிக்காவின் வடமேற்கு பகுதியில் உள்ள அல்ஜீரியா நாட்டில் 1900மாம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட புனித அகஸ்டின் பேராலயத்தை புதுப்பிக்கும் பணிகள் கடந்த ஆண்டு ஆரம்பமாயின.
திருத்தந்தையின் பெயரால் செயல்படும் அறக்கட்டளை, இப்பேராலயத்தைப் புதுப்பிக்கும் பணிகளுக்கு நிதி உதவிகள் செய்துள்ளபோதிலும், திருத்தந்தை தனிப்பட்ட வகையிலும் நிதி உதவி அளித்துள்ளார் என்று Constantine-Hippo மறைமாவட்டத்தின் ஆயரும் இயேசுசபையைச் சேர்ந்தவருமான ஆயர் Paul Desfarges S.J. வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டார்.
புனித அகஸ்தின் 4ம் நூற்றாண்டில் ஆயராகப் பணியாற்றிய Hippoவின் இடிபாடுகளுக்கு அருகே 1881ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 1900மாம் ஆண்டு முடிக்கப்பட்ட புனித அகஸ்தின் பேராலயம் அரேபிய, மற்றும் உரோமைய கட்டிடக் கலைகளின் சங்கமமாக உள்ளது என்று வத்திக்கான் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.