2012-02-15 15:26:15

பிப்ரவரி 15, 2012. கவிதைக் கனவுகள்............. கல்லான கருவறை


கல்லறை கருவறையாகி
உயிர்ப்பு இடம்பெற்றது அன்று.
கருவறை கல்லறையாகி
உயிர்ப்பலி இடப்படுகிறது இன்று.

தன் குட்டியை தானே தின்னும்
சில விலங்கினங்கள்.
கருவறைக்குள் எமனாகும்
தாயை என்னென்பது?

இங்கு முதலில் மடிவது
குழந்தையல்ல, தாய்மை.
இங்கு சிதைக்கப்படுவது
கருவல்ல, மனிதம்.

முகம் பார்க்காமலேயே
கொன்று விடுகிறார்கள்.
கோடுகோடுகளாய் தெரிந்த
நவீன ஓவியங்கள்
அர்த்தம் புரியாமலேயே
அழிக்கப்படுகின்றன.
கனவுகளாய்ப் பிறந்த குழந்தைகள்
காட்சிகளாய்த் தங்குவதில்லை.

பிறப்பு இறப்பு தேதி குறிப்பிட முடியாக் கல்லறைகள்
ஆண்டு தோறும் ஐந்தரை கோடி, தாயின் கருவறைக்குள்.
இறப்பைத் தடுக்க முடியா மனிதன்
பிறப்பைத் தடுப்பதாக மார்தட்டிக்கொள்கிறான்.








All the contents on this site are copyrighted ©.