2012-02-11 13:47:16

குடியேற்றதாரக் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை – இலங்கை காரித்தாஸ்


பிப்.11,2012. வெளிநாடுகளில் முழுப் பாதுகாப்புடன் வேலை செய்வதற்கான உரிமை, ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமை என்று, கொழும்பு பல்கலைக்கழகப் பேராசிரியர் Ramanie Jayathilaka கூறினார்.
“குடியேற்றதாரத் தொழிலாளர் மற்றும் அவர்களது குடும்பங்களின் சமூக நலம்” என்ற தலைப்பில், Sedec என்ற இலங்கை காரித்தாஸ் நிறுவனம் நடத்திய கருத்தரங்கில் உரையாற்றிய பேராசிரியர் Jayathilaka, குடியேற்றதாரக் குடிமக்கள், தங்கள் நாடுகளைவிட்டுச் செல்லும் முன்னரும், சென்ற பிறகும் அவர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்பதை வலியுறுத்திப் பேசினார்.
மேலும், இக்கூட்டத்தில் பேசிய, காரித்தாஸ் நிறுவனத்தின் பெண்கள் பிரிவுத் தலைவர் அருள்சகோதரி Ushani Perera, குடியேற்றத்தின் நன்மை, தீமைகளை எடுத்துரைத்து அவர்களை வழிநடத்த வேண்டியது, திருஅவையின் உறுப்பினர்களாகிய எங்களது கடமை என்று குறிப்பிட்டார்.
இலங்கையின் மக்கள்தொகையில் ஏறக்குறைய 23 விழுக்காட்டினர் வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர். இக்குடியேற்றதாரத் தொழிலாளர், 2010ம் ஆண்டில், தேசியப் பொருளாதாரத்துக்கு 241 கோடி அமெரிக்க டாலர் வழங்கினர் என்று அருள்சோகதரி Ushani Perera கூறினார்.
இவர்கள் நாட்டின் வருமானத்துக்குப் பெரும் ஊற்றாக உள்ளனர் என்றும் அச்சகோதரி கூறினார்.








All the contents on this site are copyrighted ©.